கலப்பு திருமணம் செய்தவர்களின் குழந்தைகளுக்கு பெற்றோர் விருப்பப்படி தந்தை அல்லது தாயின் சாதி அடிப்படையில் சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசு ஆணையை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஆணையில், “கலப்பு திருமணம் செய்தவர்களின் குழந்தைகளுக்கு அவர்களின் தந்தை அல்லது தாய் சார்ந்துள்ள சாதியை குறிப்பிடாமல், பெற்றோர் விரும்பும் சாதி சான்றிதழ் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் என வழங்கப்பட்டது.
இதற்குப் பதிலாக பெற்றோர் குறிப்பிடும் சாதியை குறிப்பிட்டு குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை பெற்றோர்கள் விடுத்திருந்தனர். அதை ஏற்று பெற்றோர் விருப்பப்படி கலப்பு திருமணம் செய்தவர்களின் குழந்தைகளுக்கு தந்தை அல்லது தாயின் சாதியை குறிப்பிட்டு அதனடிப்படையில் சாதி சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு அரசாணையை வெளியிட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விவசாய பயன்பாட்டு பம்பு செட்டுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்!