அரசின் பல்வேறு நலத்திட்ட பயன்கள் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டி புள்ளி விவரங்களை பெறுவதற்காக, தற்போதைய நிலவரப்படி சாதிவாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளி விவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை முடிவு செய்து, அப்புள்ளி விவரங்களைத் திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் A. குலசேகரன் தலைமையில் தமிழ்நாட்டில் சாதிவாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளி விவரங்களை சேகரிக்கும் ஆணையம் ( Commission for Collection of quantifiable data on castes , communities and Tribes of Tamil Nadu ) அமைத்து அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
மேற்படி ஆணையத்தின் அலுவல் சார்ந்த உறுப்பினர்களின் முதல் கூட்டம் இன்று (ஜன. 20) சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆய்வு கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தற்போது சாதிவாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளி விவரங்களை (Quantifiable data) சேகரிக்கும் வழிமுறைகள் குறித்து கேட்கப்பட்டது.
இக்கூட்டத்தில், அரசு கூடுதல் தலைமை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் கே.பணீந்திர ரெட்டி, அரசு முதன்மைச் செயலர், பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை டாக்டர் பி. சந்தரமோகன், பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை ஆணையர் அதுல் ஆனந்த், தமிழ்நாடு மின் ஆளுகை முகமை ஆணையர் சந்தோஷ் கே. மிஸ்ரா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க...குட்கா முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் ரமணா உள்பட 30 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்