தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமான நல்லகண்ணுவின் புகைப்படத்தை, ஆபாசமாகச் சித்தரித்து ஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பும் வகையில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நல்லகண்ணுவின் எளிமையான வாழ்க்கையை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
மேலும், கடந்த 17ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகப் புகைப்படத்தையும், பெண் உரிமை செயற்பாட்டாளர் ஒருவரின் புகைப்படத்தையும் சேர்த்து பதிவிட்டு அவதூறு பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், முத்தரசன் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: 'அறப்போர்க் களத்தைக் கட்டியமைப்போம்; அக்கப்போர்க் களத்தைப் புறக்கணிப்போம்' - ஸ்டாலின் கடிதம்