சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் நடைமுறையில் உள்ள பொதுவான நிலையாணையில் (Common Standing Order) மாற்றம் கொண்டு வர வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. அதன்படி, பொதுவான நிலையாணையில் மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் 5 பேர் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் சென்னை மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர், அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர், சாலைப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர், மாநகரப் போக்குவரத்துக் கழக தலைமை நிதி அலுவலர் மற்றும் எல்பிஎப், சிஐடியு, டிடிஎஸ்எப் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளும் இடம் பெற்றுள்ளனர்.
அதிமுக தொழிற்சங்கம் இக்குழுவில் இடம்பெறவில்லை. இக்குழு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு பொதுவான நிலையாணையில் செய்ய வேண்டிய மாற்றங்களை குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.