கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மே மாதம் 10ஆம் தேதி முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. தற்போது தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நாளை காலை காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது.
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. மதுக்கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கரோனா முன்னெச்சரிகை நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும். கூட்டத்தைக் கட்டுப்படுத்த தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆறு அடி தகுந்த இடைவெளி இருக்க வேண்டும். குறிப்பாக, மதுபானம் வாங்க வரும் நபர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் இல்லாமல் மது வாங்க வரும் நபர்களுக்கு கட்டாயம் மதுபானங்கள் வழங்க கூடாது எனவும் தமிழ்நாடு அரசு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையார் சங்கர் ஜிவால் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் ஆகியோர் சென்னையிலுள்ள மதுபான கடைகளில் செய்யப்பட்டுள்ள தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் படிங்க:காவல் துறையினரிடம் தகராறில் ஈடுபட்டால் வழக்குப்பதிவு - சென்னை பெருநகர காவல் ஆணையர்