ETV Bharat / city

கல்லூரி தேர்வுக் கட்டண உயர்வை திமுக திரும்பப் பெற வேண்டும் - ஓபிஎஸ் - Bharathidasan Universitiy Affliated College

கல்லூரி தேர்வுக் கட்டணம் உட்பட பல்வேறு கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தியுள்ள திமுக அரசிற்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்
author img

By

Published : Apr 10, 2022, 12:45 PM IST

சென்னை: இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இன்று (ஏப். 10) வெளியிட்டுள்ள அறிக்கையில், "30 வயதுக்குட்பட்ட தமிழ்நாடு கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்து, அதன்மூலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள திமுக, வாக்குறுதியை நிறைவேற்றாததோடு, கல்லூரி மாணவர்களின் தேர்வுக் கட்டணங்களை இரண்டு, மூன்று மடங்கு உயர்த்த வழிவகை செய்துள்ளது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற செயலாகும்.

இயல்பு நிலை திரும்பவில்லை: கரோனா தொற்று காரணமாக, 2020ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியிலிருந்து முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் மூட உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாக, பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்ததுடன், கடன் பெற்று குடும்பத்தை நடத்தினர். இந்த நிலை, ஏறத்தாழ ஆறு மாதங்கள் நீடித்த நிலையில், தற்போது கரோனா தாக்கம் சற்று குறைந்ததை அடுத்து ஓரளவு இயல்பு நிலை திரும்பி வருகிறது. பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டாலும், அந்த கல்வியாண்டிற்கான தேர்வுகள் நடத்தப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, இரண்டாவது அலை, மூன்றாவது அலை காரணமாக மீண்டும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்புதான் பள்ளி, கல்லூரிகள் முழுமையாக திறக்கப்பட்டன. அனைவரும் பணிக்குச் செல்ல ஆரம்பித்து இருக்கின்றனர். இருந்தாலும், அவர்களுடைய வாழ்க்கை இயல்பான நிலையை அடைய மேலும் ஓரிரு ஆண்டுகள் ஆகும்.

மாணவர்கள் போராட்டம்: இந்த நிலையில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 147 இணைப்புக் கல்லூரிகளில் பயிலும் ஏழை எளிய மாணவரின் தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட பெரும்பாலான கட்டணங்கள் இரண்டு, மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாகவும், சில இனங்களுக்கு பொருள்கள் மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதனைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்தத் தேர்வுக் கட்டண உயர்வு என்பது தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் நீட்டிக்கப்படுமா என்ற அச்சமும் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் தற்போது நிலவுகிறது.

முதலமைச்சருக்கு கோரிக்கை: இந்தக் கட்டண உயர்வு குறித்து மாணவர்கள் போராட்டங்களை நடத்தியும், அரசு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. பழைய கட்டணத்தையே தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் வசூலிக்கவும், இதர பல்கலைக்கழகங்களும் கட்டண உயர்வை அறிவிக்காமல் இருக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது.

எனவே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாணவர்களின் ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டும், கரோனா தொற்று நோயினால் ஏற்பட்ட பாதிப்பினைக் கருத்தில் கொண்டும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணம் உட்பட அனைத்து கட்டண உயர்வையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இனி வருங்காலங்களில் பிற பல்கலைக்கழகங்களில் கட்டண உயர்வு அறிவிப்பு வெளியிடாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஒற்றைத் தலைமையை நோக்கி ஈபிஎஸ்... முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் ஓபிஎஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.