ETV Bharat / city

ரூ.10 கோடியில் கல்லூரிக் கல்வி இயக்குனரகத்திற்கு புதிய கட்டிடம்!

சென்னை: கல்லூரிக் கல்வி இயக்ககம், சென்னை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் நிர்வாக அலுவலகம் கட்டுவதற்கு ரூபாய் 10 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

author img

By

Published : Oct 4, 2019, 10:09 AM IST

10 Crore Fund Allotted

உயர்கல்வித்துறைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜூலை எட்டாம் தேதி விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்லூரிக் கல்வி இயக்ககம் 54 ஆண்டுகளாக தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்குச் சொந்தமான கட்டடத்தில் இயங்கி வருகிறது.

இந்த இயக்கத்திற்கென தனி கட்டடம் ஏற்படுத்தி கொடுத்து, மின் ஆளுமை, கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகியவற்றை முழுமையாக நிறைவேற்ற ஏதுவாக கல்லூரிக் கல்வி இயக்கத்திற்கான நிர்வாகக் கட்டடத்துடன், சென்னை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் அலுவலகக் கட்டடம் சேர்த்து மூன்று ஆயிரத்து 534 சதுர மீட்டர் பரப்பளவில் 10 கோடி ரூபாய் செலவில் சென்னை சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் கட்டப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் தற்போது 112 அரசுக் கல்லூரிகள், 162 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 1260 சுயநிதிக் கல்லூரிகள் என 1534 கல்லூரிகள் நேரடியாகவும் மற்றும் 27 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளும் இயங்கிவருகின்றன. கல்லூரிகளில் பயிலும் சுமார் 10 லட்சம் மாணவர்களின் கல்வி நலன் சார்ந்த பணிகள் கல்லூரிக் கல்வி இயக்குனரகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே கல்லூரிக் கல்வி இயக்ககம், சென்னை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்ககம் ஆகியவற்றிற்கான ஒருங்கிணைந்த அலுவலக கட்டடத்தை கல்வியியல் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் 3534 சதுர அடி பரப்பளவில் மின்தூக்கி வசதியுடன் அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கான பணிகளை இந்தாண்டு தொடங்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க

உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு

Intro:ரூ.10 கோடியில் கல்லூரி கல்வி இயக்குனரகத்திற்கு புதிய கட்டிடம்

Body:கல்லூரி கல்வி இயக்ககம் கட்ட ரூ 10 கோடி ஒதுக்கீடு
சென்னை,

கல்லூரி கல்வி இயக்ககம் மற்றும் சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் நிர்வாக அலுவலகம் கட்டுவதற்கு ரூ 10 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக சட்டப்பேரவையில் ஜூலை எட்டாம் தேதி விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்லூரி கல்வி இயக்ககம் 54 ஆண்டுகளாக தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த இயக்கத்திற்கு தனி ஒரு கட்டடம் ஏற்படுத்தி கொடுத்து, மின் ஆளுமை, கல்வி சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகியவற்றை முழுமையாக நிறைவேற்ற ஏதுவாக கல்லூரிக் கல்வி இயக்கத்திற்கான நிர்வாக கட்டடத்துடன், சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் அலுவலக கட்டடம் சேர்த்து 3 ஆயிரத்து 534 சதுர மீட்டர் பரப்பளவில் 10 கோடி ரூபாய் செலவில் சென்னை சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் கட்டப்படும் என அறிவித்தார்.

கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் தற்போது 112 அரசு கல்லூரிகள் 162 அரசு உதவி பெறும் கல்லூரிகள் 1260 சுயநிதி கல்லூரிகள் என 1534 கல்லூரிகள் நேரடியாகவும் மற்றும் 27 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளும் இயங்கிவருகின்றன.

கல்லூரிகளில் பயிலும் சுமார் 10 லட்சம் மாணவர்களின் கல்வி நலன் சார்ந்த பணிகள் ஆகியவை கல்லூரி கல்வி இயக்குனரகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே கல்லூரி கல்வி இயக்ககம் மற்றும் சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்கம் ஆகியவற்றிற்கான ஒருங்கிணைந்த அலுவலக கட்டடத்தை கல்வியியல் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் 3534 சதுர அடி பரப்பளவில் மின்தூக்கி வசதியுடன் அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இதற்கான பணிகளை இந்தாண்டு துவங்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.