ETV Bharat / city

சாதாரண கட்டணப்பேருந்துகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்க உத்தரவு!

சாதாரண பயண கட்டணப்பேருந்துகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

பேருந்துகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும்- போக்குவரத்துத்துறை அமைச்சர்

author img

By

Published : Jun 27, 2022, 10:28 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த, நான்காவது கட்ட பேச்சுவார்த்தை கடந்த மாதம் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தலைமையில், போக்குவரத்துத்துறை முதன்மைச்செயலர் டாக்டர் கே.கோபால் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு பேட்டாவை நிர்ணயம் செய்திட வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், 'முதலமைச்சர் அறிவுரையின் பேரில், மாநகர் போக்குவரத்துக் கழகம்(சென்னை)லிட்., சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சாதாரண பயண கட்டணப்பேருந்துகளில் மகளிர் இலவசப் பேருந்து பயணம் செய்ய அனுமதித்ததைத் தொடர்ந்து ஓட்டுநர், நடத்துநர்கள் பெற்று வந்த வசூல்படி(Collection Batta) குறைவினை ஈடுகட்டும் வகையில் அதனை உயர்த்தி முறைப்படுத்தி வழங்கும் வகையில் சாதாரண கட்டணப் பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும்” என போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வழக்கறிஞருடன் ஓபிஎஸ் ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.