'இமைக்கா நொடிகள்' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் படம் 'கோப்ரா'. இதில் நடிகர் விக்ரம், கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
மதி என்கிற கணக்கு வாத்தியாராக விக்ரம் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். 'மாஸ்டர்' படம் தொடங்கும்போது இப்படம் தொடங்கப்பட்டது.
![படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-06-cobra-vikram-script-7205221_15082021154829_1508f_1629022709_434.jpg)
ஆனால், 'மாஸ்டர்' வெளியாகி விஜய்யின் அடுத்த படத்தின் படப்பிடிப்புகூட பாதி முடிந்துவிட்டது. ஆனால், 'கோப்ரா' படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை.
இந்நிலையில், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது. கார்த்திக் சுப்புராஜின் #சியான்60 படத்தை முடித்துக் கொடுத்துவிட்ட நடிகர் விக்ரம், மீண்டும் 'கோப்ரா' படப்பிடிப்பில் இணைகிறார்.
இதையும் படிங்க: ’வழக்கறிஞர் வந்தால்தான் பேசுவேன்’ - வாக்குவாதத்தில் மீரா