ETV Bharat / city

இன்று முதல் அதிகாலையில் மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மெட்ரோ

மெட்ரோ ரயில் சேவை இன்று (ஜூலை 8) முதல் காலை 5.30 மணிக்கு தொடங்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில்
மெட்ரோ ரயில்
author img

By

Published : Jul 8, 2021, 10:16 AM IST

Updated : Jul 8, 2021, 12:36 PM IST

சென்னை: கரோனா பெருந்தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதையடுத்து, தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில், சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.

தற்போது மக்கள் பயன்பாடு அதிகரித்ததை தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் அதிகரிக்கப்படுகிறது. இன்று முதல் காலை 5.30 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"கூட்ட நெரிசல் மிகுந்த காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் ஐந்து நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்றும், மற்ற நேரங்களில் 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்தச் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை மெட்ரோ ரயிலிலும், ரயில் நிலைய வளாகத்திலும் முறையான பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதால் பயணிகள் அச்சமின்றி மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 3,367 பேருக்கு இன்று கரோனா

Last Updated : Jul 8, 2021, 12:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.