ETV Bharat / city

வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் போல முதலமைச்சரின் செயல்கள் உள்ளன - அண்ணாமலை கிண்டல் பேச்சு! - cm stalin

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் முதலமைச்சரின் செயல்கள் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் போல் உள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

அண்ணாமலை
அண்ணாமலை
author img

By

Published : May 22, 2022, 8:09 PM IST

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ’மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்திருக்கிறது, திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி 72 மணி நேரத்திற்குள் பெட்ரோல் , டீசல் விலை குறைப்பு மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் குறித்து அறிவிப்பு வெளியிடாவிட்டால், கோட்டையை நோக்கி பாஜக முற்றுகைப் போராட்டம் நடத்தும்’ என எச்சரித்தார்.

அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

’முதலமைச்சர் காலையில் மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தி படத்துக்கு மரியாதை செலுத்துவதும் , மாலையில் அவரது இறப்புக்கு காரணமானவர்களை விடுவிப்பது குறித்து ஆலோசனை நடத்துவதும் வடிவேல் நடித்த காமெடி காட்சியில் வரும் “ காலையில் பேசியது வேற வாய், இப்போ பேசுவது வேற வாய்” என்பது போல் இருக்கிறது’ என விமர்சனம் செய்தார்.

மேலும் பெட்ரோல் , டீசல் விலைக் குறைப்பு தொடர்பாக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சப்பைக் கட்டு கட்டுவதாகக் கூறிய அண்ணாமலை மாநிலத்தில் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும், நடுரோட்டில் பயமின்றி ஒருவரை வெட்டும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தனது இருப்பை காட்டிக்கொள்ள தவறான தகவல்களை பேசுகிறார் அண்ணாமலை: செந்தில் பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.