ETV Bharat / city

உலக தாய்ப்பால் வாரம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! - சென்னை மாவட்டச் செய்திகள்

மகளிரும், குழந்தைகளும் நலமுடன் வாழ்ந்தால் மாநிலம் செழிக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக தாய்ப்பால் வாரத்திற்கான தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
author img

By

Published : Jul 31, 2021, 10:48 PM IST

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரையிலான 7 நாள்கள் உலக தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்படுகிறது.

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், 'குழந்தை செல்வத்தை எதிர்நோக்கியுள்ள எனதருமை சகோதரிகளே!

தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பதைவிட, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உங்கள் நலனில் அக்கறை கொண்டவனாக, உங்களை பத்திரிகை செய்தியின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஆக.,1 ஆம் தேதி முதல் அடுத்த 7 தினங்கள் உலக தாய்ப்பால் வார விழாவாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

மகளிரும் குழந்தைகளும் நலமுடன் வாழ்ந்தால் மாநிலம் செழிக்கும் என்பதனைக் கருத்தில் கொண்டு, தாய்க்கும் சேய்க்கும் பல நலத்திட்டங்களை வகுத்து, செயல்படுத்தி, மக்கள் நலனில் இந்த அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது.

குழந்தையின் முதல் 1000 நாட்கள், அதாவது தாயின் வயிற்றில் கரு உருவானது முதல் 2 வயது வரையிலான நாட்கள் குழந்தையின் ஒட்டுமொத்த எதிர்கால வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது என மருத்துவர்கள் தெரிவிப்பதால், இந்த முதல் 1000 நாட்களில் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.

இந்த வாரம், உலக தாய்ப்பால் வாரம். தாய்ப்பாலின் மகத்துவத்தை மக்களுக்கு எடுத்துச் செல்லும் இந்தத் தருணத்தில், குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தவறாமல் தாய்ப்பால் அளிக்க வேண்டும்; 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும். 6ஆவது மாதம் முதல் தாய்ப்பாலுடன் இணை உணவும் தொடர்ந்து கொடுங்கள் என்றும் கனிவோடு ஒரு சகோதரனாய் கேட்டுக் கொள்கிறேன்.

தாயும், சேயும் நலமுடன் வாழ இத்தருணத்தில் அன்போடு வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கரோனா பரிசோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - மாநகராட்சி வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.