சென்னை: சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன் உருவச் சிலையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று (டிசம்பர் 26) நேரில் திறந்துவைத்தார்.
நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் நாவலர் நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்பட்டு திறக்கப்படும் என சட்டபேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில், இந்த சிலை திறக்கப்பட்டு உள்ளது.
![CM Stalin unveiled the statue of Dravidian Leader Nedunchezhiyan, Statue of VR Nedunchezhiyan, நாவலர் நெடுஞ்செழியன் சிலையை திறந்துவைத்த ஸ்டாலின், திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர் நாவலர் நெடுஞ்செழியன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14013621_n1.jpg)
தமிழ்நாட்டின் இடைக்கால முதலமைச்சராக நாவலர் நெடுஞ்செழியன் மூன்று முறை பதவி வகித்துள்ளார். அதிமுக அவைத்தலைவராகவும் இருந்துள்ளார்.
![CM Stalin unveiled the statue of Dravidian Leader Nedunchezhiyan, Statue of VR Nedunchezhiyan, நாவலர் நெடுஞ்செழியன் சிலையை திறந்துவைத்த ஸ்டாலின், திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர் நாவலர் நெடுஞ்செழியன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14013621_n2.jpg)
அரை நூற்றாண்டுக்கால தலைவர்
இந்நிலையில், மறைந்த நெடுஞ்செழியனின் உருவச் சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்து, நாட்டுடையாக்கப்பட்ட அவரின் நூல்களுக்கான நூலுரிமை தொகையான ரூ.20 லட்சத்தை அவரது குடும்பத்தினரிடம் முதலமைச்சர் வழங்கினார். நீதிக்கட்சியின் வரலாறு, மொழிப்போராட்டம் உள்ளிட்ட எண்ணற்ற நூல்களை நாவலர் நெடுஞ்செழியன் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
![CM Stalin unveiled the statue of Dravidian Leader Nedunchezhiyan, Statue of VR Nedunchezhiyan, நாவலர் நெடுஞ்செழியன் சிலையை திறந்துவைத்த ஸ்டாலின், திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர் நாவலர் நெடுஞ்செழியன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14013621_n4.jpg)
1920இல் தஞ்சை திருக்கண்ணபுரத்தில் பிறந்த நாவலர் நெடுஞ்செழியன், 2000ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி மறைந்தார். 1967 முதல் கல்வி, நிதித்துறை உணவு என பல்வேறு துறைகளின் அமைச்சராக இருந்தவர், எம்ஜிஆரின் நம்பிக்கை உரியவர்களில் ஒருவராக திகழ்ந்து அரை நூற்றாண்டு மேலாக திராவிட அரசியலில் இருந்து மறைந்தவர். அவருக்கு புகழ் சேர்க்கும் வண்ணம், சிலை திறக்கப்பட்டுள்ளது.