ETV Bharat / city

'திராவிட மாடல்' நோக்கிச் செயல்படும் ஸ்டாலின் தலைமையிலான அரசு! - stalin

அனைத்துச் சமூகங்கள், பிரிவினர்கள் உள்ளடக்கிய வளர்ச்சியே திராவிட மாடல் என்றும், அதை நோக்கியே திமுக அரசின் திட்டமிடுதல் இருக்கும் என்றும் தமிழ்நாடு மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Merchants of Madras, cm stali, stalin, ஸ்டாலின், முக ஸ்டாலின்

author img

By

Published : Oct 11, 2021, 11:26 AM IST

சென்னை: 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழின் 'Merchants of Madras' என்ற புதிய வாராந்திரப் பக்கத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். பின்னர், 'Trillion Dollar Tamil Nadu' என்று நிகழ்ச்சியில் பங்கேற்று மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது, "கல்வி, மருத்துவம், சினிமா, மகளிர், கலை வரிசையிலே வர்த்தகம் தொழில் தொடர்பான செய்திகளை வழங்குவதற்காக 'மெர்ச்சென்ட்ஸ் ஆஃப் மெட்ராஸ்' என்ற ஒரு புதிய பகுதியைத் தொடங்கியிருப்பதைக் கண்டு நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். அதிலும், குறிப்பாக தமிழ்நாடு தொழில் துறை குறித்த செய்திகள் அதில் அதிகம் இடம்பெறும் என்பதை அறிந்து இன்னும் அதிகமாக மகிழ்ச்சியடைகிறேன்.

தமிழ்நாட்டில் மட்டும்தான்

தொழில் துறை என்று போட்டு வடமாநிலச் செய்திகளையே அதிகம் போட்டுவிடாமல், தமிழ்நாடு குறித்த செய்திகள் அதிகமாக இருக்க வேண்டும். என்னுடைய வேண்டுகோளாகவும் நான் இங்கே எடுத்துவைக்கிறேன்.

புதிய அரசு அமைந்த பிறகு எத்தனையோ முன்னெடுப்புகளை நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். இதில் முக்கியமானது, இந்த மேடையில் அமர்ந்திருக்கும் எஸ். நாராயண், அவர் உள்பட முக்கியமான ஐந்து ஆளுமைகளைக் கொண்டு பொருளாதார ஆலோசனைக் குழுவை நியமித்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும்.

திராவிட மாடல்

இந்தியாவில் எந்த மாநிலமும் அமைக்காத ஆலோசனைக் குழு தமிழ்நாட்டில் மட்டும்தான் அமைக்கப்பட்டிருக்கிறது என்று பல்வேறு பத்திரிகைகள் பாராட்டி எழுதியிருக்கின்றன. பேராசிரியர் ரகுராம் ராஜன், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர். எஸ்தர் டஃப்லோ உலகத்தின் உயரிய நோபல் பரிசு பெற்றவர்; அரவிந்த் சுப்பிரமணியம், ஒன்றிய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தவர்; ஜான் ட்ரீஸ், பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென்னுடன் இணைந்து புத்தகம் எழுதியவர்; எஸ். நாராயண், ஒன்றிய அரசின் நிதிச் செயலராக இருந்தவர்.

Merchants of Madras, cm stali, stalin, ஸ்டாலின், முக ஸ்டாலின்
'Merchants of Madras' என்ற புதிய வாராந்திர பக்கத்தை திறந்துவைத்த முதலமைச்சர்

கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் திறம்படச் செயல்பட்டவர்; வழிநடத்தியவர் இவர்களைக் கொண்டு ஆலோசனைக் குழு அமைத்துள்ளோம். 'தமிழ்நாட்டில் கருணாநிதி ஆட்சிக் காலமானது, சமூக மாற்றத்துக்கான அடித்தளமாக கிராம அளவிலும், கூட்டுறவு மட்டத்தில் அமைப்பு ரீதியாகவும் அமைந்துள்ளது. இதுதான் திராவிட மாடல்' எஸ். நாராயண் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.

அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, இதுதான் திராவிட மாடல். அந்த நோக்கத்துடன் தமிழ்நாடு வளர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அதனை நோக்கித்தான் எங்களுடைய எல்லா திட்டமிடுதல்களும் அமைந்துகொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்புகள், தனிநபர் வருமானம் ஆகியவை அதிகமாக வேண்டும்.

மாநில உரிமைகள் பறிப்பு

மக்களின் சமூக உரிமை, சமூக சுய மரியாதை இவை அனைத்தும் உயர வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக அது அமைய வேண்டும் என்றே திட்டமிட்டு இந்த ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாடு அரசு ஐந்து லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கிறது. பொதுத் துறை நிறுவனங்கள் இரண்டு லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கிறது. நிதி ஆதாரம் என்பது விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில துறைகளின் மூலமாக மட்டும்தான் வருகிறது. வரி வசூலில் இருந்த மாநில உரிமைகளை ஒன்றிய அரசு ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) மூலமாகப் பறித்துவிட்டது. அதனால் வரி வசூலை நம்ப முடியாது.

நமது வளத்தைக் கொண்டு நாம் நம்மை வளப்படுத்திக் கொள்ளும் நிலைமையில் இருக்கிறோம். திமுக அரசு அமைந்த இந்த நான்கு மாத காலத்தில், தொழில் துறை புத்துணர்வு அடைந்துள்ளது. இரண்டு முக்கியமான மாநாடுகளை அரசு நடத்தியிருக்கிறது. 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி, தமிழ்நாடு' என்ற மாநாட்டை சென்னையில் நடத்தினோம்.

விழா மேடையில் முதலமைச்சர்

புதிய முதலீடுகளும், வேலைவாய்ப்புகளும்

மிக முன்னணி நிறுவனங்கள் பங்கேற்ற மாநாடு அது தெற்காசியாவிலேயே தொழில்புரிவதற்கு உகந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்துவதே எனது லட்சியம் என்று அந்த மாநாட்டில் நான் குறிப்பிட்டுச் சொன்னேன். அதற்காகத் தொழில்புரிவதை எளிமை ஆக்க ஒற்றைச் சாளர முறை (Single Window System) இணையதளம் 2.0-வை நான் தொடங்கிவைத்தேன்.

புதிய தொழில்களை தமிழ்நாட்டை நோக்கி ஈர்க்க வேண்டுமானால் உள்கட்டமைப்பை உலகத் தரம் வாய்ந்ததாக அமைக்க வேண்டும், அதற்கான பணிகளையும் நாங்கள் தொடங்கி இருக்கிறோம். அந்த மாநாட்டில்தான் புதிய தொழில்கள் தொடங்குவதற்கு 35 நிறுவனங்களுடன், தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. முதன் முதலாக ரூ.17,141 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, அதன்மூலமாக 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கிறது.

அடுத்ததாக சில வாரங்களுக்கு முன்னால் ஏற்றுமதி தொடர்பான ஒரு மாநாட்டைச் சென்னையில் நடத்தினோம். 'ஏற்றுமதியில் ஏற்றம்; முன்னணியில் தமிழ்நாடு' என்று அந்த மாநாட்டுக்குத் தலைப்பு கொடுத்திருந்தோம். அன்றைய தினம் ரூ. 2.180 கோடி ரூபாய் மதிப்பிலான 25 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

முதலமைச்சருக்கு நினைவுப்பரிசு

ஏற்றுமதிக்கு அதிக கவனம்

இதன் மூலமாக 42 ஆயிரத்து 145 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கிறது. இப்படி பல்வேறு நிறுவனங்கள் தொடங்க இருக்கின்றன. 1.93 லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதியுடன், இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் மூன்றாவது பெரிய ஏற்றுமதி மாநிலமாக விளங்கிவருகிறது. இதனை முதலிடத்துக்கு கொண்டுவருவதற்கு அதற்கான முழுமூச்சில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

அதற்காக தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கையை வெளியிட்டு இருக்கிறோம். மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர ஏற்றுமதி நிறுவனக் கையேட்டையும் வெளியிட்டுள்ளோம். தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களும் அதிகமாக வேண்டும். ஏற்றுமதி ஆகும் பொருள்களும் அதிகமாக வேண்டும்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

அரசியல் சூழல் மாறியுள்ளது

அதற்கான அனைத்துத் திட்டமிடுதல்களையும் தமிழ்நாடு அரசு செய்துவருகிறது. தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் பணத்தால் நடக்கும் பாரம்பரிய பத்திரிகை ஒன்று தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்குப் பலரும் தயங்குகிறார்கள் என்று தனது கெட்ட எண்ணத்தை செய்திக் கட்டுரையாக இரண்டு நாள்களுக்கு முன்னால் வெளியிட்டுள்ளது. அதுபோன்று நீங்கள் செயல்பட மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது.

அனைத்துத் தொழில்களும் தொடங்குவதற்கான சாதகமான சூழல் தமிழ்நாட்டில் உண்டு என்பதை நீங்கள் கட்டுரைகளாக வெளியிட வேண்டும். தமிழ்நாட்டில் இயற்கைச் சூழல் அனைத்துத் தொழில்களுக்கும் இடமளிப்பதாக இருக்கிறது.

மனித வளம் என்பதும் சிறப்பானதாக இருக்கிறது. தமிழ்நாட்டின் ஆட்சி மற்றும் அரசியல் சூழலும் மாறி இருக்கிறது என்பதை இந்தியாவுக்கு மட்டுமல்ல உலக நிறுவனங்களுக்கும் சொல்ல வேண்டிய கடமை டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு உண்டு.

இந்தியாவை ஈர்த்த தமிழ்நாடு

கரோனாவைக் கட்டுப்படுத்தியதில் தொடங்கி தமிழ்நாட்டு வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பது வரை இந்தியாவின் கவனத்தை இன்றைய தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. இந்த வெற்றிகரமான நடவடிக்கைகளை இந்தியா முழுமைக்கும் கொண்டுசெல்லுங்கள். அரசைப் பாராட்டி எழுதுங்கள் என்று நான் கட்டளை போடவில்லை, விமர்சனங்கள் வையுங்கள் அதனை ஏற்றுக்கொள்ள திறந்த மனத்தோடு தயாராக இருக்கிறோம்.

என்னுடைய வருத்தமெல்லாம் சிறு தவறு நடக்கும்போது அதனைப் பெரிதாக விமர்சிக்கும் சில பத்திரிகைகள் பெரிய நன்மைகளைச் செய்யும்போது சிறு அளவில்கூட பாராட்டுவது இல்லையே என்பதுதான். பாராட்டுபவருக்குதான் திட்டுவதற்கான உரிமையும் இருக்கிறது என்பதை ஊடகங்கள் மறந்துவிட வேண்டாம் என்று அனைத்து ஊடகங்களுக்கும் நான் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

ஊடகங்களுக்கு வேண்டுகோள்

'காரிருள் நீக்கும் கதிரொளியாகச் செயல்படுங்கள்' என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் சென்னை பதிப்பை தொடங்கிவைத்துப் பேசும்போது கருணாநிதி சொன்னார். அனைத்து ஊடகங்களும் அப்படிச் செயல்பட வேண்டும் என்பதை இந்த விழாவின் மூலமாக வேண்டுகோளாக நான் எடுத்துவைக்க கடமைப்பட்டுள்ளேன்.

200ஆவது ஆண்டு விழாவை நோக்கி நெருங்கிவரும் டைம்ஸ் ஆஃப் பல்லாண்டுகள் பரவிநின்று தமிழ்நாட்டின் புகழை இந்தியாவுக்கு, உலகத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று நெஞ்சார மனதாரத் தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் வாழ்த்துகிறேன்" என விரிவாகப் பேசினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் பொருளாதார வல்லுநர் குழு உணர்த்தும் செய்தி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.