ETV Bharat / city

பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுக்கு முதலமைச்சரின் அறிவுரை என்ன? - cm stalin review meeting with school education department

பள்ளிக் கல்வித் துறையின் ஒட்டுமொத்த மறுமலர்ச்சியை ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

முக ஸ்டாலின், ஸ்டாலின், mk stalin, stalin, cm stalin review meeting with school education department
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான் ஆய்வுக் கூட்டம்
author img

By

Published : Jul 1, 2021, 10:51 PM IST

சென்னை: பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை 1) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத்தில் விவாதம்

மாணவர்கள், ஆசிரியர்களின் நலனுக்காகப் பள்ளிக் கல்வித் துறையால் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு நலத்திட்டங்கள், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, பெருந்தொற்றுக் காலத்தில் மாணவர்களுக்கு ஆற்றிவரும் கல்விப் பணிகள், அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் ஆகியவை குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

முதலமைச்சரின் ஆலோசனை

முக ஸ்டாலின், ஸ்டாலின், mk stalin, stalin, cm stalin review meeting with school education department
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆய்வுக் கூட்டம்

அரசுப் பள்ளிகளில் குடிநீர், கழிவறை, மின்சாதன வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, பள்ளி வளாகத்தைப் பராமரிப்பது, பாதுகாப்புப் பணிகளைத் திறம்பட மேற்கொள்வது, இணைய வசதிகளைப் பள்ளிகளில் ஏற்படுத்துவது, மாணவர்களின் கற்றல் அடைவில் கவனம் செலுத்தித் தமிழ்நாட்டின் கல்வித் தரத்தினை உயர்த்துவது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.

மறுமலர்ச்சியே ஒற்றை இலக்கு

'தரமான அடிப்படைக் கல்வி முதல், அரசுப் பள்ளி மாணவர்களை இந்தியாவின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெறச் செய்வதுவரை, பள்ளிக் கல்வித் துறையின் ஒட்டுமொத்த மறுமலர்ச்சியை ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும்' என முதலமைச்சர் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் பங்கேற்றோர்

இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலர் வெ. இறையன்பு, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலர் ச. கிருஷ்ணன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வி ஆணையர் க. நந்தகுமார் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'நீட்டுக்கு நிச்சயம் நிரந்தரத் தீர்வு' - திமுகவை பலமாக நம்பும் கி. வீரமணி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.