ETV Bharat / city

ஒன்றிய அரசும், கரவொலியும் - நேரு விளையாட்டு அரங்கில் சுவாரஸ்யம்

ஜனவரியில் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தொடங்கப்பட்ட போது அதற்கு ஒன்றிய அரசே பணம் கொடுத்ததாக ஆங்கிலத்தில் யூனியன் கவர்ன்மெண்ட் என்று பிரதமர் மோடி கூறினார். இதை கேட்ட திமுக தொண்டர்கள் கைகளை தட்டி வரவேற்றனர்.இதனால் நேரு உள் விளையாட்டு அரங்கில் அரசியல் சுவாரசியத்திற்கு பஞ்சமில்லாமல் இருந்தது.

ஒன்றிய அரசு என ஒப்புக்கொண்ட மோடி
ஒன்றிய அரசு என ஒப்புக்கொண்ட மோடி
author img

By

Published : May 27, 2022, 9:10 AM IST

Updated : May 27, 2022, 9:47 AM IST

சென்னை: நேரு உள்விளையாட்டு அரங்கில் பல்வேறு திட்ட பணிகளுக்கு 31 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி நேற்று (மே. 26) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதலில் அரங்கத்திற்குள் எந்த கட்சியின் தலைவர்கள் வரும்போது ஆரவார சத்ததோடு வாழ்த்து கோஷம் வருகிறது என திமுக, பாஜக இடையே கோஷ போரே நடைபெற்றது. அதன் பிறகு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முதலில் வரவேற்புரையாற்றினார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று வரவேற்றபோது, வாழ்த்து கோஷத்தால் வரவேற்பு பட்டியல் வாசிப்பை 1 நிமிடத்திற்கு நிறுத்தும் அளவிற்கு திமுகவினர் ஆரவாரம் செய்தனர்.

பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு நலன் சார்ந்து 5 கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தினார். அப்போது ஒன்றிய அரசு என்று 12 இடங்களில் குறிப்பிட்டு அவரிம் பேச்சு அடங்கியிருந்தது. முதல்முறை ஒன்றிய அரசு என்று ஸ்டாலின் கூறிய உடனே பாஜக தொண்டர்கள், ஒன்றிய அரசு இல்லை மத்திய அரசு என்று குறிப்பிட கூறி கோஷமிட்டனர். இருந்தாலும் முதலமைச்சர் அதை பெரியதாய் கவனிக்காதவாறு உரையை தொடர்ந்து மீண்டும் அழுத்தமாக ஒன்றிய அரசு ஒன்றிய அரசு என 12 இடத்தில் குறிப்பிட்டு பேசினார்.

இதன் பிறகு பேசிய பிரதமர் மோடி இந்த ஆண்டு ஜனவரியில் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தொடங்கியது. அதற்கு முழுமையும் ஒன்றிய அரசே பணம் கொடுத்து வருகிறது என்று ஆங்கிலத்தில் யூனியன் கவர்ன்மெண்ட் என்று கூறினார். இதை கேட்ட திமுக தொண்டர்கள் கைகளை தட்டி வரவேற்றனர்.

இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினின் அரசியல் நாடகம்; தமிழ்நாடு சரித்திரத்தில் கரும்புள்ளி: அண்ணாமலை

Last Updated : May 27, 2022, 9:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.