ETV Bharat / city

MK Stalin relief fund for farmers: ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம்; சாலைகளுக்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு

மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வடிகால்கள் ஆகியவற்றை சீரமைக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்தும், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் ஹெக்டேருக்கு தலா ரூ. 20,000 வழங்கவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (MK Stalin relief fund for farmers) உத்தரவிட்டுள்ளார்.

Cm Stalin Relief Announcement
Cm Stalin Relief Announcement
author img

By

Published : Nov 16, 2021, 3:00 PM IST

Updated : Nov 16, 2021, 5:52 PM IST

சென்னை: வடகிழக்குப் பருவமழையினால் (Northeast Monsoon) சென்னை, அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கன்னியாகுமரியிலும் மிக அதிகளவில் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம்

டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்கள் குறித்த அறிக்கையை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமயிலான அமைச்சர் குழு முதலமைச்சரிடம் இன்று (நவ. 16) சமர்ப்பித்தனர்.

அறிக்கை மீதான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். விரிவான ஆலோசனைக்குப் பின்னர் முதலமைச்சர் பின்வரும் நிதி விடுவிப்பு அறிவிப்பினை (MK Stalin relief fund for farmers) வெளியிட்டார்.

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
  • அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை - கார் - சொர்ணவாரிப் பயிர்கள், முழுமையாக சேதமடைந்த இனங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்படும்.

ஒரு ஹெக்டேருக்கான இடுபொருள்கள்

நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்து, நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை மறுசாகுபடி செய்திட ஏதுவாக, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 6 ஆயிரத்து 38 ரூபாய் மதிப்பீட்டில் இடுபொருள்கள் பின்வருமாறு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.

  • குறுகியகால நெல் 45 கிலோ ரூ.1,485
  • நுண்ணூட்ட உரம் 25 கிலோ ரூ.1,235
  • யூரியா - 60 கிலோ உரம் ரூ.354
  • DAP 125 கிலோ - ரூ.2,964

மழை வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் பாதிப்படைந்த சாலைகள், வடிகால்கள், இதர உட்கட்டமைப்பு வசதிகளை சரிசெய்ய ரூ.300 கோடி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: Cauvery Delta Crop Damage: ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்த அமைச்சர் குழு

Last Updated : Nov 16, 2021, 5:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.