சென்னை: தொழில் புரிய ஏதுவான மாநிலங்களுக்கான தரவரிசையில் தமிழ்நாடு 3ஆவது இடத்தை பெற்றதற்காக தொழில் துறை அமைச்சர் மற்றும் துறை அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில், 'தொழில் புரிய ஏதுவான மாநிலங்களுக்கான தரவரிசையில் சிறப்பாகச்செயல்படும் மாநிலங்களுள் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது. புள்ளிகள் அடிப்படையில் பார்த்தால், 14ஆவது இடத்தில் இருந்து 3ஆவது இடத்துக்குச் சென்றிருக்கிறோம்.
தொடர்ச்சியான திட்டமிட்ட நடவடிக்கைகளால் முதலீடுகளுக்கான முக்கிய மையமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ள தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கும், துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கருவில் இருக்கும் குழந்தையைத் தத்தெடுக்கக்கூடாது - பஞ்சாப், ஹரியானா நீதிமன்றங்கள் அறிவிப்பு!