சென்னை: 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் சென்னை நுங்கம்பாக்கம், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கிவைத்தார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2021-2022ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயின்ற 6,35,947 மாணவர்களுக்கு 323 கோடியே 3 லட்சத்து 61 ஆயிரத்து 42 ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
சுமார் 200 அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மிதிவண்டியை பெற்றுக்கொண்டனர். இவ்விழாவில் அமைச்சர்கள், சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா. சுப்பிரமணியன், ராஜ கண்ணப்பன், கயல்விழி மற்றும் பல அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: பேனா வடிவில் சிலை: அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு இன்னும் வெளியிடவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்