சென்னை: அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி 1981ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பயிற்சிக்கான முக்கிய மையமாக விளங்கும் இந்நிறுவனம், அமைச்சுப்பணி முதல் அகில இந்தியப் பணி அலுவலர்கள் வரை அனைத்துத் தரப்பு அரசு அலுவலர்களுக்கும் பயிற்சி தரும் முதன்மை நிறுவனமாக விளங்குவதால், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி ஒன்றிய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறையாலும், தமிழ்நாடு அரசாலும் மாநில நிர்வாகப் பயிற்சி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
இக்கல்லூரி வளாகத்தில், 8 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குளிர்பதன வசதியுடன் கூடிய ஆறு ஸ்மார்ட் வகுப்பறைகள் (Smart Classes) மற்றும் குளிர்பதன வசதியுடன் கூடிய 15 விடுதி அறைகள் அடங்கிய இரண்டு புதிய கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளரும், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குநர் வெ. இறையன்பு, மனித வள மேலாண்மைத் துறை செயலாளர் மைதிலி சு. ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில் ரூ. 8.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 குளிர்சாதன வசதியுடன் கூடிய மிடுக்கு வகுப்பறைகள், 15 குளிர்சாதன வசதியுடன் கூடிய
— CMOTamilNadu (@CMOTamilnadu) April 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
விடுதி அறைகள் அடங்கிய 2 புதிய கட்டடங்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திறந்து வைத்தார். pic.twitter.com/DO9RcO6u1t
">சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில் ரூ. 8.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 குளிர்சாதன வசதியுடன் கூடிய மிடுக்கு வகுப்பறைகள், 15 குளிர்சாதன வசதியுடன் கூடிய
— CMOTamilNadu (@CMOTamilnadu) April 4, 2022
விடுதி அறைகள் அடங்கிய 2 புதிய கட்டடங்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திறந்து வைத்தார். pic.twitter.com/DO9RcO6u1tசென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில் ரூ. 8.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 குளிர்சாதன வசதியுடன் கூடிய மிடுக்கு வகுப்பறைகள், 15 குளிர்சாதன வசதியுடன் கூடிய
— CMOTamilNadu (@CMOTamilnadu) April 4, 2022
விடுதி அறைகள் அடங்கிய 2 புதிய கட்டடங்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திறந்து வைத்தார். pic.twitter.com/DO9RcO6u1t
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்!