ETV Bharat / city

'மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஏராளமானத் திட்டங்களை செயல்படுத்துவது தமிழ்நாடு தான்' - முதலமைச்சர்

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் மேம்பாட்டிற்கான கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்தி, அவர்களுக்கு சமநிலை, சமவாய்ப்பு என்னும் சமூக நீதியை நிலைநாட்டிட தமிழ்நாடு அரசு முழுமூச்சுடன் செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்துவது தமிழ்நாடு தான்

author img

By

Published : Jul 25, 2022, 5:08 PM IST

தென்காசி மாவட்டம் ஆயக்குடியில் அமைந்துள்ள அமர்சேவா சங்கத்தின் 40ஆவது ஆண்டு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலினை மாற்றுத்திறனாளி மாணவர்கள் நடனமாடி வரவேற்றனர்.

விழாவில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், 'நாட்டிலேயே மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்துவது தமிழ்நாடு தான்.

மாணவர்களின் முழுமையான வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு நல்ல தரமான கல்வி அளிப்பது மட்டுமல்லாமல் பொறுப்புள்ள குடிமக்களாகவும் ஆகக்கூடிய வகையிலே, சிறப்பான சூழ்நிலைகளை உருவாக்கி, அவற்றை செயல்படுத்துவதில் முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளை குழந்தைப்பருவத்தின் முதற்கொண்டு கண்டறிந்து, மாற்றுத்திறனாளி குழந்தைகளின் மேம்பாட்டிற்கான கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்தி, அவர்களுக்கு சமநிலை சமவாய்ப்பு என்னும் சமூக நீதியை நிலைநாட்டிட தமிழ்நாடு அரசு முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது’ என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, விழாவில் தமிழ்நாடு அரசின் சமக்ர சிக்‌ஷா கல்விக்கான தமிழ்நாடு மாநில கல்வி இயக்கத்துடன் இணைந்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வியை வழங்க டிஜிட்டல் மறுவாழ்வு தளமான ENABLING INCLUSION வழியாக அனைவரையும் உள்ளடக்கிய கல்விக்கான மாநிலத்திட்டத்தை முதலமைச்சர் தொடக்கி வைத்தார்.

மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்துவது தமிழ்நாடு தான்
'மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஏராளமானத் திட்டங்களை செயல்படுத்துவது தமிழ்நாடு தான்' - முதலமைச்சர்

மேலும் அமர் சேவா சங்கத்தின் ஆண்டு மலரையும் முதலமைச்சர் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமர் சேவா சங்கத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி திட்டம் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.