ETV Bharat / city

ஆளுநருக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதம் ஏதுமில்லை - சட்டப்பேரவையில் ஸ்டாலின்!

author img

By

Published : Apr 18, 2022, 2:12 PM IST

ஆளுநருக்கும் தனக்கும் இடையே சுமுகமான உறவு நீடிக்கிறது என்றும் தனிப்பட்ட விரோதம் ஏதுமில்லை என்றும் சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் ஸ்டாலின்
சட்டப்பேரவையில் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஏப். 18) நடைபெறுகிறது.

இந்நிலையில், 110 விதியின்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பேசியதாவது, "நீட் தேர்வுக்கு எதிரான மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அந்த மசோதா ஆளுநர் மாளிகை வளாகத்தில் 210 நாள்கள் தூங்கிக் கிடக்கிறது.

முதலமைச்சர் விளக்கம்: இதுவரை மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த நிலையில், தமிழ்நாடு மக்களுக்கு எதிரான இந்த செயலுக்கு எதிர்ப்பு வகையிலும் சட்டப்பேரவையின் மாண்பை பாதுகாக்கும் வகையிலும் அவருடனான தேநீர் சந்திப்பை புறக்கணித்தோம். மேலும், இதுகுறித்து அவரிடம் விளக்கம் அளித்துள்ளோம்.

சட்டப்பேரவையில் ஸ்டாலின்

ஆளுநருக்கும் எனக்கும் இடையே எவ்வித தனிப்பட்ட விரோதமும் இல்லை. ஆளுநர் பழக இனிமையானவர், எங்களுக்கு உரிய மரியாதையை ஆளுநர் அளித்து வருகிறார். நாங்களும் அதற்கு உரிய மரியாதையை அளித்து வருகிறோம். அரசியல் கடந்து பண்பாட்டை பாதுகாப்போம்.

எனது 50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் எத்தனையோ வழிகளில், எத்தனையோ அவமானங்களையும் சந்தித்து இருக்கிறேன். அதனை புறந்தள்ளிவிட்டு என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற அடிப்படையிலேதான் பணியாற்றி வருகிறேன்.

அவமானங்களை ஏற்றுக்கொள்வேன்...: எனக்கு தனிப்பட்ட முறையில் ஏற்படும் அவமானம் ஆகியவற்றால் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்குமானால் அதனை நான் ஏற்பேன். எனவே, தமிழ்நாடு ஆளுநர், சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தேவைப்பட்டால் அனைத்து கட்சி கூட்டத்தில் கருத்து கேட்கவும் தயாராக இருக்கிறோம். இதில் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் உயிரிழப்பு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.