ETV Bharat / city

Trichy SSI Murder: ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்!

திருச்சியில் ஆடு திருடும் கும்பலால் கொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Trichy SSI Murder
Trichy SSI Murder
author img

By

Published : Nov 21, 2021, 12:39 PM IST

சென்னை: திருச்சி அருகே ஆடு திருடும் கும்பலை விரட்டிச் சென்ற, சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் (Trichy SSI Murder) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், காவல் பணியின்போது படுகொலை செய்யப்பட்ட எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் நவல்பட்டு காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட பூலாங்குடி காலனியில் நேற்றிரவு (நவ.20) ரோந்துப் பணியிலும் வாகனச் சோதனையிலும் ஈடுபட்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத இரண்டு திருடர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும்போது அவர் துரத்திப் பிடித்துள்ளார்.

நிதியுதவியும் அரசு பணியும்

இச்சம்பவத்தின்போது அந்த நபர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனை வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து காவல் துறையின் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.

சிறப்பு உதவி ஆய்வாளர் ரோந்துப் பணியிலிருக்கும்போது அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்று மிகுந்த துயரமடைந்தேன். இக்கொடிய சம்பவத்தால் உயிரிழந்த பூமிநாதன், சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது குடும்பத்தாருக்கு அரசு சார்பாக உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடி நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Trichy SSI Murder: திருச்சியில் காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.