ETV Bharat / city

'டெல்லியில் உள்ள தமிழர்களுக்கு உணவு, மருத்துவ வசதி வழங்குக' - கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

author img

By

Published : Apr 25, 2020, 9:53 AM IST

Updated : Apr 25, 2020, 12:14 PM IST

சென்னை: டெல்லி முகாம்களில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துதர வலியுறுத்தி அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

cm-palanisamy
cm-palanisamy

இது தொடர்பாக அவர் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதிய கடிதத்தில்,

"டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 559 பேர், அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கியிருக்கும் நிலைமைகள் குறித்து மாநில அரசு பல குறைகளை பெற்று வருகிறது. அவர்களில் சிலர் நீரிழிவு நோயாளிகள் மற்றும் பிற கொமொர்பிடிட்டிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உறவினர்கள் புகார் அளித்து வருகின்றனர்.

தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் சரியான நேரத்தில் உணவு வழங்கப்படுவதில்லை. தனிமைப்படுத்தலில் இருந்த முகமது முஸ்தபா ஹாஜியர் என்பவர் 22.4.2020 அன்று காலமானார். தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நபர்களிடமிருந்து குறைகளை பெறும்போதெல்லாம், முதன்மை ஆணையர் (மொபைல் எண் 9810254777) தமிழ்நாடு மாளிகை, புது தில்லி, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை, டெல்லி அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலர்களிடம் தெரிவிக்குமாறு டெல்லி அரசு அலுவலர்கள் கூறுவதை கவனிக்க முடிகிறது.

எனவே, தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நபர்களுக்கு சிறந்த பராமரிப்பை வழங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், கொமொர்பிட் நிலைமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளையும் வழங்க வேண்டும். ரமலான் மாதம் தொடங்கியிருப்பதால், அவர்களுக்கு உரிய நேரத்தில் உணவு மற்றும் மருந்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Last Updated : Apr 25, 2020, 12:14 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.