ETV Bharat / city

'பகட்டு காட்டியதில்லை... பழிகள்தான் உந்துதல்' - ஸ்டாலின் உரையின் ஹைலைட்ஸ்!

author img

By

Published : Jun 24, 2021, 1:32 PM IST

Updated : Jun 24, 2021, 8:14 PM IST

”கருணாநிதியின் மகன் என நான் பகட்டு காட்டியதில்லை. என் மீது சொல்லப்பட்ட பழிகள், அவமானங்கள் தான், நான் மேலும் உழைக்க உந்துகின்றன” என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

ஸ்டாலின் உரையின் ஹைலைட்ஸ்
ஸ்டாலின் உரையின் ஹைலைட்ஸ்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு, கூட்டத்தொடரின் நிறைவு நாளான இன்று (ஜூன்.24) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலுரை அளித்தார்.

’ஆளுநர் உரை வெறும் ட்ரெயலர்தான்’

அப்போது அவர் அளித்த பதிலுரையில், "ஆளுநர் உரை ஒரு முன்னோட்டம் தான். முழு நீள திரைப்படத்தை திரையில் காண்பர் என்பது போல, மேற்கொண்டு வரும் பயணத்தில் சவால்கள், அதை சந்திக்கும் சவால்கள் அனைத்தும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படும். கடந்த இரண்டு நாள்களாக அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளன.

ஸ்டாலின்
ஸ்டாலின்

'இல்லை இல்லை’ என்ற சூழலே இல்லாத நிலை

அதை இந்த அரசுக்கு சொன்ன நல்ல ஆலோசனைகளாக எடுத்துகொள்கிறேன். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கரோனாவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம். தடுப்பூசி இல்லை, ஆக்சிஜன் இல்லை என்ற சூழலில் தான் ஆட்சிக்கு வந்தோம்; தற்போது ’இல்லை இல்லை’ என்ற சூழலே இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம்.

கரோனா தொற்று குறைந்தாலும் தொடர்ந்து சிகிச்சை பெறும் வகையில் அனைத்து மாவட்ட மருத்துவக் கல்லூரிகளிலும் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்திருப்பதை பெருமையாக கருதுகிறேன். அண்ணாவை தொடர்ந்து கருணாநிதி. கருணாநிதியை தொடர்ந்து நான் முதலமைச்சராகி இருக்கிறேன்.

கருணாநிதியின் மகன் என பகட்டு காட்டியதில்லை

’அண்ணாவின் அரசியல் வாரிசு’, ’கருணாநிதியின் கொள்கை வாரிசு’ நான். என் மீது சொல்லப்பட்ட பழிகள், அவமானங்கள் தான் என்னை மேலும் உழைக்க உந்துகின்றன. கருணாநிதியின் மகன் என நான் பகட்டு காட்டியதில்லை. அடக்கப்பட்ட யானைக்கு தான் மணி கட்டுவார்கள், திமுக அடக்கமுடியாத யானை!

அடக்க முடியாத யானை

யானைக்கு நான்கு கால்கள்தான் பலம். அதுபோல திமுகவுக்கு சமூக நீதி, மொழிப்பற்று சுய மரியாதை, மாநில உரிமை போன்ற நான்கு கொள்கைகள்தான் பலம். எட்டு வழிச்சாலை, மீத்தேன், நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்கு திரும்பப் பெறப்படும்.

பத்திரிகையாளர்கள் மீதான வழக்குகள் வாபஸ்

வளர்ச்சியில் பின்தங்கி உள்ள செய்யாறு, திண்டிவனத்தில் 22 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்க தொழிற்சாலைகள் அமைக்கப்படும். கடந்த காலத்தில் அறவழியில் போராடியவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் ஆய்வு செய்யப்பட்ட வாபஸ் பெறப்படும், பத்திரிகையாளர்கள் மீது அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள பழமையான திருக்கோயில்கள் 100 கோடி ரூபாய் செலவில் கோயில்கள் புதுப்பிக்கப்படும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் தொடர்ந்து படிப்படியாக நிறைவேற்றப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க; ஆளுநரின் உரை ட்ரெய்லர் தான்.. அண்ணாவின் அரசியல் வாரிசு நான்: அதிரடி பேச்சில் அசரடித்த ஸ்டாலின்

Last Updated : Jun 24, 2021, 8:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.