ETV Bharat / city

'உள்ளம் நிறைந்த கலைஞரை, இல்லத்திலே கொண்டாடுவோம்' - CM MK Stalin

சென்னை: ஜூன் 3ஆம் தேதி, நம் தாய்மொழியாம் தமிழுக்குச் செம்மொழித் தகுதியினைப் பெற்றுத் தந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை இல்லத்திலே கொண்டாட வேண்டும் என்று கட்சித் தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

cm mk stalin, karunanidhi
cm mk stalin, karunanidhi
author img

By

Published : May 30, 2021, 8:55 AM IST

Updated : May 30, 2021, 9:47 AM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஜூன் 3ஆம் தேதி, நம் தாய்மொழியாம் தமிழுக்குச் செம்மொழித் தகுதியினைப் பெற்றுத் தந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள்.

இந்நாள் திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்குச் சிறந்த நாள். அய்யா முத்துவேலரின் வாழ்விணையரான அன்னை அஞ்சுகம் அம்மையார் ஈன்ற நாள். அந்த மாபெரும் தலைவர் இன்று நம்முடன் இல்லை என்கிற ஏக்கம் ஒருபுறமிருந்தாலும், அவர் கட்டிக் காத்த இந்த இயக்கம், இன்று தனிப்பெரும்பான்மையுடன் தமிழ்நாட்டை ஆளும் வாய்ப்பினை பெற்றிருக்கிறது.

5 முறை, மொத்தம் 19 ஆண்டுகள் தமிழ்நாட்டின் தகுதிமிக்க முதலமைச்சராக இருந்து ஒவ்வொரு முறையும் உயர்தனிச் செம்மொழியாம் தமிழையும், உயிருக்கு இணையான தமிழர்களையும் உயர்த்திய தலைவருக்கு 6ஆவது முறையாக முதலமைச்சராகும் வாய்ப்பு அமையாமல் போனாலும் 6ஆவது முறையாக திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது.

இருண்ட காலத்தை விரட்டியடித்து, சூரியன் உதித்திருப்பதால் நாளைய பொழுதுகள் எல்லாம் நல்லதாகவே விடியும் என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது. கருணாநிதி முதலமைச்சர் பொறுப்பில் இல்லை என்றாலும், அவர்தான் ஆட்சி செய்கிறார் என்பதை உணர்ந்தும் வகையில், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” எனப் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றேன்.

நம் நெஞ்சில் எந்நாளும் நிலைத்திருப்பவருமான தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாட முடியவில்லையே என்ற ஏக்கம் ஒவ்வொரு உடன்பிறப்பின் நெஞ்சிலும் இருக்கத்தானே செய்யும். கடந்தாண்டும் கரோனா கால ஊரடங்கு காரணமாகத் தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை எளிய முறையில்தான் கொண்டாடினோம்.

ஓராண்டுக்குள் நிலைமை மாறும் என எதிர்பார்த்தோம். என் மனதிலும்கூட, தலைவர் கலைஞரின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் நாள் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான திட்டங்கள் உண்டு. ஆனால், எல்லாவற்றையும் இந்தப் பேரிடர் காலம் ஒத்தி வைத்திருக்கிறது. மக்களின் உயிரைக் காப்பது ஒன்றே நம் முன் உள்ள தலையாய பணி. தலைவர் கருணாநிதி இன்று ஆட்சியில் இருந்திருந்தால், இதைத்தான் கூறியிருப்பார்.

அதன்படி, ஊரடங்கு காலம் என்பதால் பொதுவெளியில் தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா நிகழ்வு எதுவும் நடத்திட வேண்டாம். நம் உள்ளமெல்லாம் நீக்கமற நிறைந்துள்ள முத்தமிழறிஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் கட்டுப்பாடு காத்து, அவரவர் இல்லங்களில் அவரின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்திக் கொண்டாடுங்கள். ஏழை - எளிய மக்களுக்கு அவர்களின் இருப்பிடம் சென்று உதவிகளை வழங்கிடுங்கள்.

முகக்கவசம், தகுந்த இடைவெளி உள்ளிட்ட கரோனா கால நெறிமுறைகளைச் சரியாகக் கடைப்பிடித்து, எவ்வகையிலும் கூட்டம் சேர்ந்திடாதவாறு கவனமாகச் செயலாற்றுங்கள். திமுக ஆட்சி அமைந்த முதல் ஆண்டில், கருணாநிதியின் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாட இயலவில்லையே என வருந்த வேண்டாம்.

ஐந்தாண்டுகளும் நம் கழக ஆட்சியின் ஆண்டுகள்தான். எனவே, பேரிடர் கால நெறிமுறைகளைக் கடைப்பிடித்து, தலைவர் கலைஞர் பிறந்தநாளை அமைதியாக, எளிமையாகக் கொண்டாடுவோம். அடுத்து வரும் ஆண்டுகளில், கருணாநிதியின் பிறந்தநாளைப் பெருமகிழ்ச்சியுடன் விழா எடுத்துக் கொண்டாடுவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மூன்று மாவட்டங்களில் முதலமைச்சர் இன்று ஆய்வு!

Last Updated : May 30, 2021, 9:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.