ETV Bharat / city

ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல ஆணையத்திற்கு தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி சிவகுமார் நியமனம்!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல ஆணைய தலைவராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சிவகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

sc st welfare commission
sc st welfare commission
author img

By

Published : Oct 15, 2021, 10:43 PM IST

சென்னை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல ஆணையத்திற்கான உயர் அலுலர்கள் நியமனம் குறித்து முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், மாநில அளவில் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும். அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், 'தமிழ்நாடு ஆதி திராவிடர் பழங்குடியினர் நல ஆணையம்' என்கிற புதிய அமைப்பு ஒன்றைத் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் உருவாக்கிட உரிய சட்டம் இயற்றப்படும் என்று முதலமைச்சரால் பேரவையில் அறிவிக்கப்பட்டு, அதற்கான உரிய சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.

மேற்படி அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, 'தமிழ்நாடு ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல ஆணையத்திற்கு' கீழ்க்காணும் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

  1. சிவகுமார் - தலைவர் (ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி)
  2. புனிதப் பாண்டியன்
  3. வழக்கறிஞர் குமாரதேவன்
  4. எழில் இளங்கோவன்
  5. லீலாவதி தனராஜ்
  6. வழக்கறிஞர் பொ. இளஞ்செழியன்
  7. முனைவர் கே. ரகுபதி

என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.