ETV Bharat / city

சென்னை தலைமை செயலகத்தில் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! - MK Stalin discuss on lock down relaxations

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 10.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.

MK Stalin
MK Stalin
author img

By

Published : Jul 16, 2021, 10:00 AM IST

சென்னை : தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் மருத்துக் குழு நிபுணர்கள், தலைமை செயலர், வருவாய் அலுவலர்கள், பொதுத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கை மேலும் தளர்த்துவது அல்லது நீட்டிப்பது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. மேலும் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

இதையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியுடனான ஆலோசனைக் கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக கலந்துகொள்கிறார்.

இந்தக் கூட்டத்தில் கரோனா பரவல் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி இயக்கம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இதற்கிடையில் நாட்டில் கடந்த 4 நாள்களாக கரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது.

அண்டை மாநிலமான கேரளத்திலும் பாதிப்புகள் அதிகம் உள்ளன. இதனால் மீண்டும் ஊரடங்கு போடப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் புதிதாக 2,405 பேருக்குக் கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.