தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 28ஆம் தேதி தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு துறைகள் சம்பந்தபட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இந்தக் கூட்டத்தின் தொடகத்தில் பேசிய முதலமைச்சர்,
'தமிழ்நாட்டிலுள்ள ஆறுகளை இணைக்க நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீர் மேலாண்மை குறித்து ஆலோசித்து நீர் தேக்கங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்றுவது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசு செயல்படுத்திய மழைநீர் சேகரிப்பு திட்டத்தைத் தற்போதைய அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது" என்று தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் காவிரி கோதாவரி இணைப்புத் திட்டம், அத்திக்கடவு அவினாசி திட்டம், நீர்வள மேலாண்மை, குடிநீர் பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.