தலைமைச் செயலகத்தில் இன்று 265 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கோயம்புத்தூர் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரையிலான மேம்பால நீட்டிப்புப் பணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா பேரவையில் தாக்கல்!