ETV Bharat / city

ரூ.24 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!

author img

By

Published : Jan 8, 2021, 5:31 PM IST

சென்னை: பொதுப்பணித் துறையின்கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறை சார்பில் 24 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நீரொழுங்கி அணைக்கட்டு, தடுப்பணைகள் கட்டும் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

சென்னை
சென்னை

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜன. 08) பொதுப்பணித் துறையின்கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறை சார்பில் மயிலாடுதுறை, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் நீரொழுங்கி, அணைக்கட்டு, தடுப்பணைகள் கட்டும் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், தென்னாம்பட்டினம் கிராமத்தில் திருவாலி ஏரியின் திருநகரி வாய்க்கால், நாட்டுக்கண்ணி-மண்ணியாறு சங்கமத்தின் கீழே, தென்னாம்பட்டினம், பெருந்தோட்டம் ஆகிய கிராமங்கள் பயன்பெறும் வகையில் ஒன்பது கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடல்நீர் உள்புகாவண்ணம் கடைமடை நீரொழுங்கி கட்டும் பணி.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், கல்குறிச்சி கிராமத்தில், பந்தனேந்தல் கண்மாய்க்கு நீர் வழங்க குண்டாற்றின் குறுக்கே 10 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 791.97 ஏக்கர் வேளாண் நிலம் பாசனவசதி பெறும் வகையில் அணைக்கட்டு கட்டும் பணி.

மதுரை மாவட்டம் சாத்தங்குடி கிராமம் அருகே தெற்காற்றின் குறுக்கே, இரண்டு கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சாத்தங்குடி, கண்ணுக்குளம் கிராமங்கள், அதனைச் சுற்றியுள்ள 19 கிணறுகளுக்கு நீர் செறிவூட்டி, 293.18 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தடுப்பணை அமைக்கும் பணி,

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், திரளி கிராமம் அருகே கவுண்டா நதியின் குறுக்கே, இரண்டு கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், திரளி, அதனைச் சுற்றியுள்ள 40 கிணறுகளுக்கு நீர் செறிவூட்டி 368.01 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும் வகையில் தடுப்பணை அமைக்கும் பணி என மொத்தம் 24 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நீர்வள ஆதாரத் துறையின் திட்டப் பணிகளுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (ஜன. 08) அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, தலைமைச் செயலாளர் க. சண்முகம், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், நீர்வள ஆதாரத் துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் கே. இராமமூர்த்தி, அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.