சென்னை: ஆந்திரப் பிரதேசம் மாநிலம் குர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ் (38). இவர் லாரி கிளீனராக பணிபுரிந்து வந்தார். நேற்று (மே.15) வெங்காயம் லோடு இறக்குவதற்காக லாரியில் ஆந்திராவில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வந்தார். பின்னர் லோடு ஏற்றி வந்த லாரி மீது அமர்ந்து ராஜ், லாரி ஓட்டுநர் பங்காரப்பா, அவரது நண்பர்கள் கிருஷ்ணன், மகேஷ் ஆகிய 4 பேரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.
அப்போது மதுபோதையில் இருந்த ராஜ் திடீரென நிலைதடுமாறி பின்புறமாக லாரியிலிருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கோயம்பேடு காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் உயிரிழந்த ராஜின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் ராஜ் லாரியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சிசிடிவி காட்சிகளை வைத்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் வழக்கறிஞரை நடுரோட்டில் தாக்கிய நபர்- வைரலாகும் வீடியோ