சென்னை: Video In: தலைமைச் செயலக கால மூலிகை பார்க் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் சில நபர்கள் நின்று இருப்பதாக தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்திற்குத் தகவல் வந்தது. அதனடிப்படையில் ரோந்துப் பணியில் இருக்கும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று அங்கு நின்றிருந்தவர்களை விசாரித்துள்ளனர்.
அப்போது, அங்கிருந்த திருநங்கையான விசாலி என்பவருக்கும் ரோந்துப்பணி காவல் துறையினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில், திருநங்கை விசாலி காவல் துறையினரை ஆபாசமாகத் திட்டியுள்ளார்.
அதனை செல்போனில் வீடியோ எடுத்த சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிடுள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வேகமாகப் பரவி வருகின்றன.
தொடர்ந்து இது குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், விசாலி அந்தப் பகுதி இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, விசாலியிடம் காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து தங்கம் பறிமுதல் - மூவர் கைது