சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவிவகித்த சஞ்ஜிப் பானர்ஜி(Sanjib Banerjee) மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இட மாறுதல் பெற்றுள்ளார்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில்(Madras High Court) தன்னுடன் பணியாற்றிய நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பதிவாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார். சென்னை நீதிமன்றத்தைச் சேர்ந்த எனது அன்பு குடும்பத்தாருக்கு என கடிதத்தை அவர் தொடங்கியுள்ளார்.
சக நீதிபதிகளுக்கு
சக நீதிபதிகளை குறிப்பிட்டு அவர் எழுதியதாவது: தனிப்பட்ட முறையில் உங்களிடம் விடைபெறாமல் செல்வதற்காக மன்னியுங்கள். என்னுடைய நடவடிக்கைகள் புண்படுத்தி இருந்தால் அது தனிப்பட்ட முறையிலானது இல்லை. அது உயர் நீதிமன்ற நலனுக்கானது மட்டுமே.
வழக்கறிஞர்களுக்கு
வழக்கறிஞர்களை குறிப்பிட்டு அவர் எழுதியதாவது: என் மீதான உங்களின் அளவுகடந்த அன்பினால் பூரித்து போயிருக்கிறேன் என சக நீதிபதிகளிடம் மகிழ்ச்சி. நாட்டிலேயே சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்தான் சிறப்பானவர்கள்.
![சஞ்ஜிப் பானர்ஜி கடிதம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-cjlettertostatepeople-script-7204624_17112021133648_1711f_1637136408_198.jpeg)
பதிவுத்துறைக்கு
பதிவுத்துறையை குறிப்பிட்டு அவர் எழுதியதாவது: திறமையான நிர்வாகத்தை மேற்கொள்ள உதவியாக இருந்த பதிவுத்துறைக்கும் நன்றி. உங்களின் நேர்மையான செயல்பாடுகளால் மேன்மையான முறையில் பணியாற்ற முடிந்தது. இதேபோல வெளிப்படைத்தன்மையுடன் நடவடிக்கைகளை தொடர வேண்டும்.
ஊழியர்களுக்கு
ஊழியர்களை குறிப்பிட்டு அவர் எழுதியதாவது: தனக்காக நீண்ட நேரம் காத்திருந்த நீதிமன்ற ஊழியர்களுக்கும் நன்றி. இதுநாள் வரை நிலப்பிரபுத்துவ கலாசாரத்தில்(Feudal culture)பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அதை முழுமையாக தகர்த்தெறிய என்னால் இயலவில்லை.
![கடிதத்தின் முக்கிய அம்சங்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13658128_banerje.png)
இந்த அழகான மாநிலத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் கடன் பட்டிருக்கிறேன். எனது சொந்த மாநிலம் என 11 மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்த மகிழ்ச்சியிலேயே உங்களிடமிருந்து நான் விடைபெறுகிறேன். நன்றி வணக்கம். இவ்வாறு அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நீதிபதிகளின் இடமாற்றம்: கொலீஜியத்தின் நிலைப்பாடு குறித்து வழக்கறிஞர்கள் கருத்து