சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கு இரண்டு புதிய வழித்தடங்களில் மாநகரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 206 Cut புதிய வழித்தடம் எண் கொண்ட பேருந்து, பூவிருந்தவல்லியிலிருந்து புறப்பட்டு வெளிவட்டச் சாலை, மண்ணிவாக்கம் இணைப்புச் சாலை, பெருங்களத்தூர் வழியாக தாம்பரம் சென்றடையும்.
நாள் ஒன்றுக்கு நான்கு பேருந்துகள் 35 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் எனச் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
203 வழித்தட எண் கொண்ட பேருந்து, பூவிருந்தவல்லியிலிருந்து புறப்பட்டு வெளிவட்டச் சாலை, படப்பை, ஒரகடம் இணைப்புச் சாலை வழியாக வாலாஜாபாத் சென்றடையும். நாள் ஒன்றுக்கு நான்கு பேருந்துகள் 50 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
இந்தப் புதிய பேருந்து சேவையை ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் நேற்று (பிப். 10) தொடங்கிவைத்தார்.
இதையும் படிங்க: தை அமாவாசையை முன்னிட்டு மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்கள்!