சென்னை விமான நிலைய கழிவறையில் இன்று(மார்ச். 3) மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் யஸ்பால்(26) என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். யஸ்பால், விமான நிலைய கழிப்பறைக்குள் சென்ற சிறிது நேரத்தில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.
தூய்மை பணியாளா் ஓடிச்சென்று பாா்த்தபோது, யஸ்பால் கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். ராஜஸ்தானை சேர்ந்த யஸ்பால், 2017ஆம் ஆண்டு முதல் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் சேர்ந்தார். அண்மைகாலமாக சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.
இதுகுறித்து குறித்து விசாரணை தொடங்கியது. முன்னதாக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஒடிசாவிலிருந்து சேலம் வரவழைக்கப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் ஆஷிஷ் குமார் பாட்டியா(30) தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சேலம் வந்துள்ள ஒடிசா சிஐஎஸ்எப் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி