இதுகுறித்து, தலைமைச் செயலகத்திலுள்ள முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த கௌதமன், ” தமிழினத்தை அழிக்கும் செயலில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் விவசாயிகள், மீனவர்கள் உரிமை பறிக்கப்பட்டுவரும் நிலையில், கல்வி உரிமையையும் பறிக்க மத்திய அரசு முயல்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதியை மத்திய அரசு கொடுத்துவிட்டு, தமிழக மாணவர்களின் சேர்க்கையை தடுக்கப் பார்க்கிறது. ஐஐடி கல்வி நிறுவனம் மத்திய அரசிடம் இருப்பது போல், அண்ணா பல்கலைக்கழகமும் மத்திய அரசிடம் சென்றால், ஏழை மாணவர்கள் படிக்க முடியாத சூழல் உருவாகும். தமிழக அரசு இதற்கு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் “எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு தகுதி - இம்மாத இறுதியில் கருத்துக் கேட்புக் கூட்டம்!