ETV Bharat / city

முதலமைச்சரை சந்தித்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி - ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Chiranjeevi Meet CM STALIN
Chiranjeevi Meet CM STALIN
author img

By

Published : Sep 1, 2021, 6:47 PM IST

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தெலுங்கு நடிகரான மெகா ஸ்டார் சிரஞ்சீவி நேரில் சந்தித்து பேசினார்.

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர், அவரை மரியாதை நிமித்தமாக பலர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சி செய்வதாக வெளிமாநிலங்களில் இருப்பவர்கள் முதலமைச்சரை பாராட்டி வருகின்றனர்.

குறிப்பாக கேரள தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற அம்மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர், "மூன்று மாதங்களில் ஒரு முதலமைச்சரால் என்னென்ன செய்ய முடியுமோ, அதனை சிறப்பாக செய்து முடித்து காட்டியிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்" என்று புகழ் பாடியுள்ளார்.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 31) நடிகர் பவன் கல்யாண், தனது சமூக வலைதள பக்கத்தில், ‘அன்புக்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, அரசியல் செய்யக்கூடாது என்பதை வார்த்தைகளால் அல்லாமல் செயல்களால் செய்து வருகிறார்" என்று பாராட்டியிருந்தார்.

முதலமைச்சரை சந்தித்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி

தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மெகா ஸ்டார் சிரஞ்சீவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியிருக்கிறார். இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைராலாகப் பரவி வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.