தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் ஜூலை 31ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். கரோனா தடுப்புக் காலத்தில் இப்பொறுப்பிற்கு புதிய அலுவலர் ஒருவரை நியமிப்பதற்கு பதில், சண்முகத்தின் பதவிக்காலத்தை நீட்டிக்க முடிவு செய்த தமிழ்நாடு அரசு, மத்திய அரசுக்கு இது தொடர்பாக பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில், அவரது பதவிக்காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, அக்டோபர் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக சண்முகம் பதவியில் நீடிப்பார்.
அரசு தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் கடந்தாண்டு ஓய்வுபெற்றதை அடுத்து, நிதித்துறை செயலாளராக இருந்து வந்த சண்முகம் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம்!