இது தொடர்பாக விமான போக்குவரத்துத் துறை செயலர் பிரதீப் சிங் கரோலாவுக்கு தமிழ்நாடு தலைமைச் செயலர் சண்முகம் அனுப்பியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டில் உள்நாட்டு விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இங்கு நிலவும் சூழ்நிலைப்படி சில கட்டுப்பாடுகளுடன் இயக்க தமிழ்நாடு அரசு கேட்டுக் கொள்கிறது.
அதன்படி, சென்னை விமான நிலையத்திற்கு நாளொன்றுக்கு 25 உள்ளூர் விமானங்கள் மட்டுமே வருவதற்கு அனுமதிக்க வேண்டிய நிலை உள்ளது. கோவை, திருச்சி, மதுரைக்கு விமானங்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதிக தொற்று பரவலை முன்னிட்டு குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து வரும் விமானங்களை அனுமதிப்பதில் மிகக்குறைவான வாய்ப்பே உள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து மற்ற மாநிலங்களுக்குச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கையில் எந்த நிபந்தனைகளும் இல்லை“ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மேம்பாலம் அமைக்கும் பணி: தவறி விழுந்தவரை காப்பாற்றிய ஊழியர்