ETV Bharat / city

வட்டாட்சியர் அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவு - இறையன்பு

வட்டாட்சியர் அலுவலகங்களில் பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தலைமை செயலர் அறிவுறுத்தியுள்ளார்.

வட்டாட்சியர் அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவு

author img

By

Published : May 28, 2022, 10:55 AM IST

சென்னை: வருவாய் நிர்வாகம் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு பணிகளை கையாள்கிறது. குறிப்பாக சான்றிதழ்கள், பட்டா உள்ளிட்ட சேவைகளை வட்டார வருவாய் அலுவலகங்கள் மேற்கொண்டு வருகின்றன. பட்டா மாற்றம், நில துணைப் பிரிவு, சாதி சான்றிதழ், விதவை சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் வழங்குதல் போன்ற பல முக்கிய சேவைகள் வழங்கப்படுகின்றன.

இந்தச் சேவைகளில் காலதாமதம் மற்றும் குறைபாடு உள்ளதாக பல புகார்கள் மக்களிடையே எழுந்தது. இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

இதனையடுத்து அனைத்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களும் தலைமை செயலர் இறையன்பு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், "மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு சென்று அவற்றின் செயல்பாடுகளை விரிவாக ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளார்.

வருமானம், சாதி, சட்டப்பூர்வ வாரிசு போன்ற முக்கியமான சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களின் நிலுவை, சான்றிதழ்கள் நிராகரிக்கப்பட்டது குறித்த புகார்கள், வழங்கப்பட்டதற்கான காரணங்கள் உண்மையானதா? இல்லையா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். OAP விண்ணப்பங்களின் நிலுவை, OAP மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் போன்றவை பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும்.

பட்டா பரிமாற்ற விண்ணப்பங்கள் எந்த நிலையில் உள்ளன. பட்டா பரிமாற்றத்தில் அலுவலர்கள் சிறந்த முறையில் செயல்படுகின்றனரா? சர்வேயரின் செயல்திறன் ஆகியவை ஆராயப்பட வேண்டும். மனுதாரர்கள் தங்கள் மனுக்களை சமர்ப்பிக்கும் போது தாலுகா அதிகாரிகளை சந்திக்க உத்தரவிடப்படுகிறதா என்பதை விசாரிக்க வேண்டும்.

பட்டாக்களில் பிழை திருத்தங்கள் தொடர்பாக தாசில்தாரிடம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளனவா? வருவாய் கோட்ட அலுவலர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்களிடம் பட்டா மாற்றத்திற்கான மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளனவா? எனவும் ஆய்வு செய்ய வேண்டும். மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வுக்கு சென்ற பிறகு, ஆய்வு குறித்து வருவாய்த் துறைக்கு அறிக்கை அளிக்கப்பட வேண்டும், எனவும் அக்கடிதத்தில் தலைமை செயலர் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 20 நாட்கள் மட்டுமே கிடைக்கும் அதிசய மாம்பழம் - ஆச்சர்யங்கள் மிகுந்த தாத்தாச்சாரியார் தோட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.