சென்னை : 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை(ஜூலை.28) தொடங்கி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதில் 187 நாடுகளை சார்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இப் போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த 2 நாட்களாக வீரர்கள் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இன்று(ஜூலை.27) மாலை 4 மணிக்கு முன்னதாக வீரர்கள் அனைவரும் சென்னைக்கு வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாலை மாமல்லபுரம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பூம்புகார் நிறுவனத்தின் சார்பில் கலை நயமிக்க ஸ்தூபியை திறந்து வைக்கிறார். அதன் தொடர்ச்சியாக மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொள்ளும் அவர், இரவு செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு தனியார் நட்சத்திர விடுதியில் இரவு விருந்து அளித்து கலந்துரையாடுகிறார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி சென்னை வருகை - 22,000 போலீசார் குவிப்பு,