சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (15.9.2022) மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் சென்னை துரைப்பாக்கம் எழில் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், ”முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" ஓவியம் வரையப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர, மலைப்பிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்கள், என மொத்தம் 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டு, 1,14,095 மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
மேலும் இத்திட்டமானது நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் செயல்பாட்டுக்கு வருகிறது.
இதையும் படிங்க: பழங்குடியின தகுதி...நரிக்குறவர் சமுதாய இளைஞர்களின் கல்வி,வேலைவாய்ப்பில் சமூகநீதியை பெற்றுத் தரும் - ஸ்டாலின்