சென்னை: தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 23ஆம் தேதி காலை ஆறு மணியுடன் முடிவடைகிறது. இந்ந நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று (ஆகஸ்ட் 21) மருத்துவ வல்லுநர்கள், அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் 50 விழுக்காடு இருக்கைகளுடன் திரையரங்கை திறக்க திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கைவைத்த நிலையில், இது தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சுற்றுலாத் தலங்கள், மெரினா கடற்கரை, கடற்கரையில் பொதுமக்கள் அனுமதி குறித்த அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கடுமையாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? - முதலமைச்சர் ஆலோசனை