ETV Bharat / city

பருவமழைக்கு முன்பே வெள்ளத் தடுப்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்: முதலமைச்சர் ஸ்டாலின்

செங்கல்பட்டு மாவட்டம் நூக்கம் பாளையம் மேம்பாலம் , அரசன் கழனி ஏரி மற்றும் மதுரப்பாக்கம் ஓடை தெற்கு டி.எல்.எப் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

பருவமழைக்கு முன்பே வெள்ளத் தடுப்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்

author img

By

Published : Jul 12, 2022, 7:03 PM IST

சென்னை: கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு முதலமைச்சர் நேரடியாக சென்று ஆய்வு செய்து, நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தி வரும் பருவமழை காலங்களில் மக்களுக்கு மழை வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் அதிக அளவில் நீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி தமிழ்நாடெங்கும் வெள்ளத் தடுப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. செம்மஞ்சேரி மற்றும் டி.எல்.எப் வளாகம் ஆகிய பகுதிகள் கடந்த பருவமழையின் போது வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அப்பகுதிகளுக்கு வெள்ளப் பாதிப்பிலிருந்து நிரந்தர தீர்வு காணும் வகையில், திட்டங்கள் தீட்டப்பட்டு வெள்ளத் தடுப்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பருவமழைக்கு முன்பே வெள்ளத் தடுப்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்
பருவமழைக்கு முன்பே வெள்ளத் தடுப்புப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவு

செங்கல்பட்டு மாவட்டம் சென்னை மாவட்டம் - சோழிங்கநல்லூர் வட்டம் மற்றும் தாம்பரம் வட்டம் , பெரும்பாக்கம் மற்றும் செம்மஞ்சேரியில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள கால்வாய்க்கு இருபுறமும் 24 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தாங்கு சுவர் கட்டும் பணியில், நூக்கம்பாளையம் மேம்பாலத்தில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்புப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

அப்போது இவ்வெள்ளத் தடுப்புப் பணிகளை மழைக்காலத்திற்கு முன்பாக விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் செங்கல்பட்டு மாவட்டம் , தாம்பரம் வட்டத்தில் 29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசன்கழனி வேலன்தாங்கல் ஏரி முதல் கழுவெளி வரை மூடுதளத்துடன் கூடிய பெருவடிகால் கால்வாய் கட்டும் பணியில், அரசன்கழனி ஏரியில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்புப் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டத்தில் 27 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மதுரப்பாக்கம் ஓடையிலிருந்து டி.எல்.எப் வளாக சாலையில் 500 மீட்டர் வரை அவசர கால வெள்ளநீர் கடத்தும் பெருவடிகால் அமைக்கும் பணி, மதுரப்பாக்கம் ஓடை, தெற்கு டிஎல் எப் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, இப்பணிகளை தரமாகவும், துரிதமாகவும் மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு . முத்துசாமி மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: காவிரியில் நீர்வரத்து 1,15,000 கன அடியாக அதிகரிப்பு - ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.