சென்னை: புற்று நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அப்போலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேரள மாநில முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கோடியேரி பாலகிருஷ்ணன் இன்று உயிரிழந்தார்.
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்த தனது சமூக வலைதளங்களில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சி.பி.ஐ.எம் தலைமைக் குழு உறுப்பினரும், மூன்று முறை அக்கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான கோடியேரி பாலகிருஷ்ணனுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன்;
கொள்கை உறுதிமிக்க தலைவராக விளங்கிய தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன், 1975ஆம் ஆண்டு நெருக்கடிநிலையின் போது மிசா சட்டத்தின் கீழ் சிறைத்தண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது' - முதலமைச்சர் ஸ்டாலின்