தொல்லியல் துறை சார்பில் மூன்று கோடியே 51 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள கட்டபொம்மன் கோட்டை, பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள மனோரா நினைவு சின்னம், நாகப்பட்டினத்தில் உள்ள டச்சுக் கல்லறை ஆகிய மூன்று நினைவுச் சின்னங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் திறந்துவைத்தார்.
இதில், தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாடுத் துறை அமைச்சர் பாண்டியராஜன், தலைமைச் செயலர் சண்முகம், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
![புனரமைக்கப்பட்ட நினைவு சின்னங்கள் - முதலமைச்சர் திறந்து வைப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-06-cminauguration-7209106_06102020144133_0610f_1601975493_1096.jpg)
இதையும் படிங்க: தேசிய நாட்டு நலப்பணித்திட்ட விருதாளர்கள் முதலமைச்சரிடம் வாழ்த்து!