ETV Bharat / city

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளைத் திறக்க உத்தரவு!

சென்னை: பாசன வசதிக்காக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளைத் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

dam
dam
author img

By

Published : May 26, 2020, 2:59 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு, பட்டணங்கால் பாசன அமைப்புகளில் உள்ள பாசனத்திற்குப் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் I மற்றும் II அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கைவிடுத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று 2020 ஜூன் 8ஆம் தேதிமுதல் 2021 பிப்ரவரி 28ஆம் தேதிவரை நாள் ஒன்றுக்கு 850 கனஅடி பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் I மற்றும் II அணைகளிலிருந்து தண்ணீரை திறக்க ஆணையிடப்பட்டுள்ளது.

இதனால், கோதையாறு, பட்டணங்கால் பாசனப் பகுதிகளின் 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும். மேலும், விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்“ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: பாஜக அரசின் மக்கள் விரோதப்போக்கு - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.