ETV Bharat / city

கரோனா தடுப்பு நடவடிக்கை - 2570 ஒப்பந்த செவிலியர்கள் நியமனம்!

சென்னை: கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக மேலும் 2570 ஒப்பந்த செவிலியர்களை பணியமர்த்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

appointment
appointment
author img

By

Published : May 8, 2020, 2:19 PM IST

கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதற்காக, மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் ஏற்கனவே 530 மருத்துவர்கள், 2323 செவிலியர்கள், 1508 ஆய்வக நுட்பனர்கள் மற்றும் 2715 சுகாதார ஆய்வாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, 6 மாத காலங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மேலும் 2570 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வருகிறது. இந்த செவிலியர்கள், ஆணை கிடைக்கப் பெற்ற மூன்று நாட்களுக்குள், பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு தலா 40 செவிலியர்கள், தாலுகா மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப 10 முதல் 30 செவிலியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும், இதன் மூலம் கரோனா தடுப்புப் பணிகள் மேலும் வலுவடையும் எனவும், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? - கமல்ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.