ETV Bharat / city

’அதிமுகவின் செல்வாக்கு என்றைக்கும் சரியாது' - முதலமைச்சர் பழனிசாமி! - அதிமுக

சென்னை: அதிமுகவின் செல்வாக்கு மக்களிடையே என்றைக்கும் சரியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

palanisami
palanisami
author img

By

Published : Mar 16, 2020, 4:56 PM IST

சட்டப்பேரவையில் உள்ளாட்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக கொறடா சக்கரபாணி, உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பெற்ற வெற்றியைப் பற்றி சிலக் கருத்துகளைத் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றதாகக் கூறும் திமுக, விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளைக் கூறி திமுக வெற்றி பெற்றதாகக் குற்றம்சாட்டிய அவர், மக்கள் உண்மையைப் புரிந்து கொண்டதால் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றியைத் தந்ததாகவும் கூறினார்.

மக்களிடம் அதிமுகவின் செல்வாக்கு கூடியிருக்கிறது என்பதையே இது காட்டுவதாகவும், அதிமுகவின் செல்வாக்கு மக்களிடம் சரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும் போது, நாடாளுமன்றத் தேர்தலில் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் எனக் கூறினார்.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 2021இல் நிறைவேற்றுவதற்கான வாக்குறுதிகளை, நாடாளுமன்றத் தேர்தலின்போது ஏன் தெரிவித்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருக்கும்போது, ஆட்சியிலேயே இல்லாத திமுக, செய்ய முடியாத திட்டங்களைக் கூறி மக்களை ஏமாற்ற முயற்சித்ததாகவும் முதலமைச்சர் குற்றம் சாட்டினார். மேலும், 2021இல் யாரை ஆட்சிக்குக் கொண்டு வரவேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. குறித்து பேச வாய்ப்பளிக்கவில்லை' - எம்எல்ஏ அபூபக்கர் வெளிநடப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.